Sunday, July 12, 2020

தீபாவளித் திருநாளில் தானம்

(போன வருடம் தீபாவளி அன்று எழுதிய சிறுகதை)என் மனதுக்கு இனிய நண்பர்களுக்கு.....
என் உள்ளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...


இந்த தீபத்திருநாளில் மனதில் தோன்றிய நல்ல எண்ணங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்.... விளைவு... இந்தக் கட்டுரை...

பட்டாசுகளின் தாளத்தோடு என் காலை விடிந்தது....

"மீண்டு வா சுர்ஜித்".. என்று இறைவனை வேண்டி.... சில நிமிடங்கள் கண்களை மூடி  தியானிக்கிறேன்....

இருபதில் கொண்டாடிய  தீபாவளிக்கும்..... அறுபதில் கொண்டாடும் தீபாவளியும்.... வேறுபட்டு இருந்தது....🧐

புது டிரஸ்....

விதவிதமான இனிப்புக்கள்....

பட்டாசுகள்......

தீபாவளி காசுக்காகவே வாங்கிய ஆசீர்வாதங்கள்....

ஆகியவையெல்லாம் இருபதுகளில் மகிழ்ச்சியை தந்தது... 

அறுபதில்....

இனிப்பு.....
டயபடீஸ் இன் காரணமாக....🙈
ஒரு காட்சிப் பொருளாக மாறிவிட்டது....

புது டிரஸ்...

XL size shirt  வாங்கினால் இருபட்டன்கள் நடுவே தொப்பை😜 தெரிந்தது...

அதை சரி செய்ய XXL size shirt வாங்கினால்..
தொப்பையை மறைத்தது.... ஆனால்... 
Shoulderil  சட்டை இறங்கியது....

Pant எப்படி  தைத்தாலும்....
Belt  துணை இருந்தாலும்.... 5 நிமிடத்திற்கு மேல் இடுப்பில் நிற்பதில்லை....😉

பட்டாசு சத்தங்கள் கேட்டு காது சலித்து கொள்ளுகிறது...🙉


அறுபதுகளில் சந்தோசம்.... மற்றவர்களை  சந்தோஷ படுத்தி பார்ப்பது தான்...

 "அம்மா...
தாயே....
தர்மம் பண்ணுங்க அம்மா"

என் சிந்தனையை தடுமாற வைத்த ஒரு ஏழையின் குரல்....

என் வாசலில்.... 

ஓர் இளம் ஏழை தாய் தன் குழந்தையுடன் நின்றிருந்தார்....

அந்தக் காட்சி என்னை பாதித்தது....

அவள் உடலில் இல்லாத ஏழ்மை.... அவள் உடையில் காண முடிந்தது....👩🏽‍⚕

இந்த தீபாவளித் திருநாளில்...
அந்த ஏழைத்தாயிக்கும் கைக்குழந்தைக்கும்... புது டிரஸ் வாங்கிக் கொடுத்து ஏன் சந்தோச படுத்தகூடாது... என்று தோன்றிய எண்ணத்தை செயல் வடிவமாக்க முற்பட்டேன்...

இருவரையும் காரில் அழைத்துச் சென்று.... வீட்டின் அருகாமையில் இருந்த ரெடிமேட் கடைக்கு சென்றேன்.

"வாங்க...வாங்க"

கடைக்காரன் என்னை புன்னகையோடு வரவேற்றார். 

"யாருக்கு டிரஸ் வாங்கணும்" என்று அவர் என்னைக் கேள்வி கேட்டாலும் அவர் கண்கள் என்னோட வந்தவர்களை நோக்கி இருந்தது.

"இவர்களுக்குத்தான்"
கைகளால் அவர்களை சுட்டிக்காட்டினேன்.

அரை மணி நேரத்தில்.... பில் என்னுடைய கைகளிலும்.... என்னுடைய கிரெடிட் கார்டு.... அவருடைய கைகளிலும் மாறியது...

அதே நேரத்தில் அவர்களை என் கண் தேடியது....

என் நெற்றியில் தோன்றிய கோடுகளைக் கண்டவுடன்....

"அவர்கள் புதிதாக வாங்கிய உடை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்"
பதிலளித்தார்.

நேர்த்தியான உடை.... 

ஆடம்பர அலங்காரம் இல்லாமல் ஒரு தேவதையாக தென்பட்டால்....

சேற்றில் பிறந்த செந்தாமரை....

குழந்தையும் அவ்வாறே...

கடைக்காரர் என் கையைப் பிடித்து குலுக்கி "கங்கிராஜுலேசன்" என்றார்.

எனக்கு வியப்பாக இருந்தது....

ஏழைக்கு உதவியதற்கு "நன்றி" என்று கூறாமல் கங்கிராஜுலேசன் என்று கூறுகிறாரே....

மனதில் எழுந்த சந்தேகத்தை மனதில் புதைத்து வைத்தேன்....

மேலும்...
சில இனிப்புகளையும், பட்டாசுகளையும் வாங்கிக் கொடுத்தேன்.

வீடு வரை அழைத்து வரலாம் என்று எண்ணி அவர்களை காரில் அமர சொன்னேன்.

அவள் காரில் ஏறி
அமர்ந்த விதமும்.... 
அவளுடைய உடல் மொழியும்....
அவள் காரில் பயணிப்பது, இது முதல்முறை அல்ல என்பதை நான் உணர்ந்தேன்....

இதைத்தான் முன்னோர்கள் 
 "ஆள் பாதி ஆடை பாதி" 
என்றார்கள்....

இதோ...

இந்த தெருக்கோடியில் என் வீடு...

வீட்டின் அருகில் செல்லச்செல்ல... 

ஒரு கூட்டம் என் வீட்டு வாசலில் நிற்பது என் கண்ணில் பட்டது...

யாருக்கு....
 என்ன ஆகிவிட்டது....

மனதில் பதட்டம்....

என் பதட்டம் ...

அவள் இதழில் புன்னகை வரவழைத்தது....

அவள் புன்னகை.. என்னை எரிச்சலூட்டியது...

காரிலிருந்து இறங்கிய உடன்....

அந்தக் கூட்டம் என்னை சூழ்ந்து கொண்டது....

அனைவரும் என் கைகுலுக்கி வாழ்த்துக்கள் கூறினார்கள்....

எனக்கு ஒன்றும் புரியவில்லை....

என் கையில் ஐந்து லட்ச ரூபாய் காசோலையை நீட்டினார்கள்...

"கங்கிராஜுலேசன் சார்..
நாங்கள் தென்றல் டிவியில் இருந்து வருகிறோம்...
தீபாவளித் திருநாளில்...
தானம் கேட்கும் ஏழையை எப்படி மக்கள் நடத்துகிறார்கள் என்று பார்க்கவே இந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நீங்கள் வெற்றி பெற்று இருக்கிறீர்கள். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்"

 முதல் முறையாக என் மனைவி  பெருமிதத்துடன் என்னைப் பார்த்தாள்

இந்த புரோகிராம்... நாளை திங்கட்கிழமை... தென்றல் டிவியில் ஒளிபரப்பப்படும் என்று கூறியதை கேட்டு எனக்கு தலை கால் புரியவில்லை.

காரில் வந்த பெண்ணும் குழந்தையும் என்னை பார்த்து புன்னகைத்தார்கள்....

இம்முறை அந்தப் புன்னகை எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது....

சிறிது நேரத்துக்குப் பிறகு கூட்டம் கலைந்தது.

நாளை...
திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு...
தென்றல் டிவி யை பார்க்கச் சொல்லி எல்லோரிடமும் கூற வேண்டும்....

முக்கியமாக...
 என் அண்ணனுக்கு...

அண்ணனை கைபேசியில் அழைத்தேன்....

"ஹலோ.... ஹலோ"

மறுமுனையில் பதில் இல்லை....

சற்று குரலை உயர்த்தி கூப்பிட்டேன்....

"ஹலோ.... ஹலோ... யார் பேசறது?

"நீங்க தாங்க பேசுறீங்க"

பார்த்திபன் பாணியில் பதில் , என் மனைவியின் குரலில்....

"நாளைக்கு தீபாவளி...
காலையில சீக்கிரமா எழுந்திருக்கணும் அப்படின்னு சொன்னேன்.... அதை
காதிலே வாங்காம.... நைட்டு ஃபுல்லா prime video வில் .... கொலையுதிர் காலம்... படம் பாத்துட்டு லேட்டா தூங்குனா.... இப்படி தான் கனவு வரும்.... சீக்கிரம் எந்திரிங்க...."

என்ன...

நான் கண்டது கனவா...

வட போச்சே....

5 லட்சம் போச்சா....

கனவைப் பற்றி மனைவியிடம் ஒன்றும் கூறாமல்....

படுக்கையிலிருந்து எழுந்து....

கங்கா ஸ்நானம் முடித்து...

பூஜை முடித்து....

காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு....

புது ஆடை உடுத்தி.....

பாப்பையா பட்டிமன்றம் பார்க்க அமர்ந்த பொழுது...

"அம்மா...
தாயே.....
தானம் பண்ணுங்க அம்மா"...

அதே குரல்....

ஏழை தாய்...
 ஒரு கைக்குழந்தையுடன்...

(இனி நான் தொடர்வது உங்கள் கற்பனையில்)🤣🤣🤣🤣🤣🤣🤣....

No comments:

Post a Comment