பெரியவா சரணம்
சிறுமியாக வந்த பாலாம்பிகா
மஹா பெரியவா சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாத யாத்திரையாக வந்திருந்தார்...
பரங்கிமலை நந்தீஸ்வரர், திரிசூலம் திரிசூல நாதரை தரிசித்து முடித்து, வழியில் இருந்த அத்திமர நிழலில் உட்கார்ந்தார்.. சீடர்களும் ஆங்காங்கே மர நிழலில் ஓய்வெடுத்தனர்...
மகா சுவாமிகளுக்கு தாகமாக இருந்ததால், சீடர்களை அழைத்தார்.. சப்தம் கேட்காததால், யாரும் கவனிக்கவில்லை..
அப்போது சிறுமி ஒருத்தி தண்ணீர் செம்புடன் பெரியவா முன் வந்து, அருள் பொங்கச் சிரித்த படி, "என்ன தாகமாக இருக்கிறதா?" எனக் கேட்ட படி தண்ணீர் கொடுத்தாள்...
மகிழ்ச்சியுடன் குடித்த பெரியவா, உதவி செய்த நன்றி சொல்ல விரும்பி நோக்க, என்ன ஆச்சரியம்! சிறுமியைக் காணவில்லை..
அதற்குள் போக வாய்ப்பில்லையே என சுற்றும் முற்றும் பார்த்தார்.. சீடர்களிடம் தேடச் சொல்லியும் அவள் அகப்படவில்லை..
கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்த பெரியவா, 'சிறுமியாக வந்தவள் அம்பிகையே' என அறிந்து கொண்டார்..
உடனே அந்தக் கிராமத்தின் தலைவர், அப் பகுதி மக்களையும் அழைத்து வரச் செய்து, தான் அமர்ந்திருந்த அத்தி மரத்தைச் சுற்றி தோண்டிப் பார்க்கும் படியும், தெய்வ சாந்நித்யம அங்கு இருப்பதால் சுவாமி சிலைகள் மண்ணில் புதைந்திருக்க வாய்ப்புண்டு என்றும் அறிவுறுத்தினார்..
அதன்பின் சுவாமிகளின் நடை பயணம் தொடர்ந்தது..
மக்கள் தோண்டிய போது சற்று ஆழத்தில் பாலாம்பிகை, சண்டிகேஸ்வரி சிலைகள் அகப்பட்டன..
மஹா சுவாமிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது... அந்த இடத்திலேயே கோவில் கட்டி பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார்..
அதன்படி உருவானது தான், சென்னை நங்கநல்லூர் அருகிலுள்ள பழவந்தாங்கல் நேரு நகர் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி கோவில்..
மஹா சுவாமிகள் மூலமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அம்பிகையை வழிபட்டால் அதிக வரம் கிடைக்கும்.
No comments:
Post a Comment