திருத்துலைவில்லி மங்கலம்
ஸ்ரீ விசாலக்ருஷ்ணாக்ஷித் தாயார் ஸமேத ஸ்ரீ அரவிந்தலோசனப் பெருமாள் {ஸ்ரீ தேவப்பிரான்} திருக்கோவில், திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி) திவ்யதேசம், தூத்துக்குடி மாவட்டம்.
திருத்துலைவில்லி மங்கலம் (திருத்தொலைவில்லிமங்களம், இரட்டை திருப்பதி)108 வைணவத் திருத்தலத்தில் ஒரு திவ்ய தேசம். இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு.] தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
திருத்துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் திருக்கோயில்
ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை சாப விமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உருப்பெற்றன. குபேரனை மதிக்காததால் சாபம் பெற்றதாகக் கூறினர். இதனாலேயே இவ்வூர் துலை, வில்லி மங்கலம் எனும் பெயர் பெற்றது.
பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும் திருமாலைத் தொழுது வழிபட திருமால் காட்சியளித்தார். தேவப்பிரான் எனும் திருப்பெயரும் பெற்றார்.
இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் தெற்கு திருக்கோயில் ராகு அம்சம் திருக்கோயில்.
திருத்துலைவில்லி அரவிந்தலோசனன் திருக்கோயில்
தினந்தோறும் தேவர்பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரரர். இத்தகைய அழகு வாய்ந்த மலர்களை சுப்ரரர் எங்கிருந்து கொணர்கிறார் என்றறிய பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்கவரும் போது பின்தொடர்ந்து வரவே, சுப்ரரர் காரணம் வினவினார். செந்தாமரை மலர்கள் கொண்டு செய்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும் அங்கேயே தமக்கு ஓர் ஆலயம் எழுப்பவும் கூறினார் பெருமாள்.
இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில்.கேது அம்சம் திருக்கோயில்.
திருந்து வேதமும் வேள்வியும் திருமாமகளிரும்தாம் மலிந் திருந்து வாழ்பொருநல் வடகரை வண் துலைவில்லி மங்கலம் கருந்தடங்கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொழும் இருந்திருந்தரவிந்த லோசன வென்றன்றே நைந்து இரங்குமே.
~ நம்மாழ்வார்
தல வரலாறு
தென்திருப்பேரை அருகிலேயே உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டும் இரட்டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஷேத்திரத்திலேயே ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. கோயில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் அதிகம் இல்லை. அர்ச்சகர்கள் வரும் நேரம் அறிந்து சென்று தரிசனம் செய்வது நல்லது. நம்மாழ்வார் 11 பாசுரங்களைப் பாடியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது என்ற இரு சாயாகிரகங்களுக்கு உரிய தலங்களாக விளங்குகிறது.
தல பெருமை
சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.
இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அதைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம்.
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி
1. சூரியன் : ஸ்ரீவைகுண்டம்
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளுர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்ரன் : தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்கலம்)
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி
தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 84 வது திவ்ய தேசம்.நவதிருப்பதிகளில் இது 9வது திருப்பதி, இரட்டைத் திருப்பதியில் இது 2வது திருப்பதி. நவகிரகங்களில் இது கேது தலம்.
திருவிழா
வைகுண்ட ஏகாதசி
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
திருத்துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் திருக்கோயில்
ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை சாப விமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உருப்பெற்றன. குபேரனை மதிக்காததால் சாபம் பெற்றதாகக் கூறினர். இதனாலேயே இவ்வூர் துலை, வில்லி மங்கலம் எனும் பெயர் பெற்றது.
பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும் திருமாலைத் தொழுது வழிபட திருமால் காட்சியளித்தார். தேவப்பிரான் எனும் திருப்பெயரும் பெற்றார்.
இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் தெற்கு திருக்கோயில் ராகு அம்சம் திருக்கோயில்.
திருத்துலைவில்லி அரவிந்தலோசனன் திருக்கோயில்
தினந்தோறும் தேவர்பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரரர். இத்தகைய அழகு வாய்ந்த மலர்களை சுப்ரரர் எங்கிருந்து கொணர்கிறார் என்றறிய பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்கவரும் போது பின்தொடர்ந்து வரவே, சுப்ரரர் காரணம் வினவினார். செந்தாமரை மலர்கள் கொண்டு செய்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும் அங்கேயே தமக்கு ஓர் ஆலயம் எழுப்பவும் கூறினார் பெருமாள்.
இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில்.கேது அம்சம் திருக்கோயில்.
பொது தகவல்
இங்கு பெருமாள் குப்த விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
No comments:
Post a Comment