Thursday, July 9, 2020

எரக்ரொஸ்டிஸ் ஸைனோசுராய்தேஸ் 2

50. எரக்ரொஸ்டிஸ் ஸைனோசுராய்தேஸ் (2 of 2) (சிசீ6) #ganeshamarkalam

அவரா கூடவே வரேன்னுட்டர். அவர் போகவேண்டிய இடம் மாம்பலம் ஸ்டேஷனுக்கு மேற்கே. நான் போர இடம் கிழக்கே. எங்கூட ரங்கநாதன் தெரு நெரிசலில் வந்து சிவா விஷ்ணு கோவில் வரைக்கும், அப்பரம் இவர் ரயிலடிக்குத் திரும்பி மேம்பாலம் ஏறி அயோத்தியா மண்டபம்? கஷ்டம்தான்.

ஆனா மனுஷர் சுவாரஸ்யமா பெசரர். தர்பை பத்திச் சொல்ரேன்னர். காசா பணமா, சில முக்கியமான விஷயங்களை கத்துக்கலாம்னு தோணவே, “பேஷா வாங்கோ.” ஆனா மாமாவுக்கு என் ஸ்பீடுக்கு ப்ளாட்பாரம் ஓவர் ப்ரிட்ஜ் ஏறி வர முடியலை. மூச்சு வாங்கித்து. “நீங்களும் மேனேஜ்மென்ட் கன்ஸல்டென்ட்டா இருந்தா படியேறிப் போக சிரமப் படேண்டாம்.” சும்மாச்சுக்கும் வம்பிழுக்கராப் போல் கமென்ட் அடிச்சேன். அத்தனை புஸ் புஸ்ஸுலேயும் கோபமா பாத்தர். ஆனா பதில் சட்னு வந்தது. :”ஏற முடியாததுக்கு காரணம் தொப்பை. செய்யர தொழிலுக்கு ஜிம்முக்கெல்லாம் போக முடயுமா என்ன? அந்தக் காலத்தில் வேத பாடசாலையில் யோகப் பயிற்சி, உடல்பயிற்சி ஆயுர்வேதம் எல்லாம் செர்த்து கத்துத் தந்தாளாம்! தொப்பை போடாது. எந்த ஓவியத்திலாவது விசுவாமித்திரரை தொப்பையோட காமிச்சிருக்காளா.” “ஆகஸ்தியரை மட்டும் அப்படி பாத்திருக்கேனே!” இருக்காது. நீங்க சீர்காழி கோவிந்தராஜன் அகஸ்தியரா நடிச்சு பாத்திருப்பேள். அவர் ஜிம்முக்குப் போலை.”

கீழே வந்ததும் கூட்டத்தில் மாமாவோட மடி ஆசாரமெல்லாம் காத்தில் பறக்க ஆரம்பிச்சது. அத்தனை கூட்டம். ஒரு இடத்தில் பர்க்கா மாட்டிண்டு கருப்பா முகம் தெரியாத பெண்களெல்லாம் ஐயர் வராருன்னு வேணும்னே இடிக்கராப்போல் வந்து கடைசீ நிமிஷத்தில் சட்டுன்னு விலகி. ஒரு இடத்தில் கரும்பு ஜூஸ் குடிச்சிண்டிருந்த ஒரு பெண்மணி சட்டுன்னு பின்னாடி நகர இவர் அவள் மேல் இடிக்க, இவர்தான் சாரி சொன்னர். “நீங்க ஸ்கூட்டர் வச்சுக்கலையா?” “புல்லட் இருக்கு. அக்கம் பக்கத்தில் போகத்தான். இத்தனை தூரம் எப்படி? பெட்ரோல் வாங்கர காசுக்கு ரெண்டுநா ஆத்தில் அடுப்பெரியும்.”

சிவா விஷ்ணு டெம்பிள் வந்துட்டம். அக்கடான்னு நின்னம். அடிக்கர 11 மணி வெய்யலில் நானும் சித்தே அலண்டுதான் போயிட்டேன்னு சொல்லலாம். எதுக்காப்போல் எல்லாம் ஒரு டேபிளீல், தரையில் விரிச்சு வச்சுண்டு விக்கர கடை தென்பட்டது. “மொதல்ல உள்ளே போய் சுவாமி தரிசனம் செஞ்சுடலாம்.” மாமாவே கூட்டிண்டு போயிட்டர். அர்ச்சகாளை நன்னா தெரியரது. இவருக்கு எல்லாரும் நமஸ்காரம் சொல்ல, ஆசாமி பிரபலம்னு புரிஞ்சிண்டேன். என்னையும் அறிமுகப் படுத்தினர். “ரெம்ப வேண்டப் பட்டவர். குரோம்பேட்டையில்தான் ஜாகை.” வேண்டப்பட்டவனா ஆனதில் எனக்கும் சந்தோஷம்தான்.

தரிசனம் முடிஞ்சு தர்பை கடைக்கு வந்துட்டம். தர்பை மட்டுமா! நிறைய சமாச்சாரம் வச்சிருக்கான். கடையப் பாத்துக்கும் ஆளைக் காணம். “சித்தே நிப்பம், கிட்டக்கேதான் சிரமபரிகாரம் செய்யப் போயிருப்பர்.” “சரி மாமா நீங்க தர்பையப் பத்தி சொல்ரேன்னேளே?” “ஆஹா! ஞாபகம் இருக்கா? நீங்களே கேக்கட்டும்னு இருந்தேன்.” ஆரம்பிச்சர்.

“ஒரு பிராமணன் தனது சடங்குகளை செய்ய துவங்கரத்துக்கு முன்னாடி தன்னை சுத்தப் படுத்திக்கொண்டு பாதுகாத்துகோள்ளவும் வேணும். இதற்கு தர்ப்பை துணை செய்யரது. புல்லுதானே, சீப்பா கிடைக்கும்போலே அதான் வாத்தியார் கட்டு கட்டா கொண்டுவரார்னு இதை சாதாரணமா எடுத்துக்கப் பிடாது. படிச்சவா கிட்டே பேசினா இந்த புல்லைப் பத்தி நிறைய மனதை கவரும் விஷயங்கள் இருப்பத தெரிஞ்சுக்கலாம். ஒவ்வொண்ணா சொல்லுவேன்”.

“காய்ந்த குசா புல்லை தர்ப்பைன்னு சொல்ரோம். இது நுணி கூராகவும், 2 அடி நீளத்துக்கு வளரும். புல் புதர் பொல வளருவதற்கு உப்பு தண்ணி தேவை. இதனால் நதி முகதுவாரங்களில் கிடைக்கும். தர்ப்பை ஆமையோட முதுகு ரோமம் சிதறி, கரை ஓரம் ஒதுங்கினதால் கிடைத்ததுன்னு ஐதீகம். ஆமை அத்தனை இருந்ததா, அதன் முதுகில் ஏது ரோமம், ஜூவில் பாத்ததில்லைன்னு கேப்பேள். இங்கே ஆமை கூர்மாவதாரம் எடுத்த மகாவிஷ்ணு. அவர் தனது முதுகை மந்தார மலையை வைத்து பாற்கடலை கடைவதற்கு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கொடுத்தபோது இது நடந்ததாம். கடைந்து எடுத்த அமிர்தமும் தர்ப்பை புல் மேல விழுந்துருக்கு. கோகுலாஷ்டமி மாதிரி வடநாட்டில் மின்னே தர்ப்பாஷ்டமி கொண்டாடுவது உண்டு”.

“பிராமணாள் நிறைய வாங்குவதால் இதை விற்பது நல்ல வியாபார தந்திரம்தான். தர்ப்பை ஆயுர்வேதத்தில் நீரிழிவு, வலிப்பு, மூலம் மற்றும் வயிற்றுப்போக்கு இத்யாதி பிர்ச்சனைகளுக்கு நல்ல உபயோகம். தவிர, நான் படித்தது: உடல் நிறத்தை மேம்படுத்தவும், புண்களை ஆற்றுவதற்கும். பக்கம் பக்கமா இந்த அபூர்வ புல்லை பற்றி ஆயுர்வேத புஸ்த்தகங்களில் இருக்கு. நாட்டு மருந்துக் கடைகளில் இதை விப்பதுக்கு அதுவே காரணம்”.

மாமா சொல்லிண்டிருகப்பவே கடைக்காரரும் வந்துடரர். சாதாரண மனுஷர். விக்கர சாமானுக்கு தோதா ஒரு பிராம்ணர்தான் கடைய நடத்துவர்னு நினைச்சேன். மின்னே அப்படித்தான் பாத்த நியாபகம். இப்ப மாறிடுத்தோ?

“சாரி சார், கொஞ்சம் வேலை. என்ன வேணும்?” இவர் என்னைப் பாத்து “சொலுங்கோ!”. “தர்பை ரெண்டு கட்டு, 6 பூணல்”. “ரெண்டு கட்டு வேண்டாம் ஒண்ணு வாங்கிக்கோண்கோ”. மாமா தடுக்கரர். “அடிக்கடி வரமுடியலை”. “காய்ஞ்சு போகுமே, அப்பரம் தண்ணீரில் நனைச்சு வச்சாலும் பவித்ரம் செய்யரச்செ உடையும். அது பிடாது. உங்க இஷ்டம்”. எடுத்துண்ட கட்டை மாமா கவனமா பாக்கரர். “ஒரே நீளமா இருப்பதா பாத்து வாங்கிக்கோங்கோ. அதிகமா உபயோகம் ஆகும். நடுவில் நுணி பிஞ்சதா இருக்கப் போரது., அதை பயன்படுத்த முடியாது”.

“கடைக்காரன் செட்டா இருக்கு. வேணுமா?” காமிக்கரான். பவித்ரம் கூர்ச்சமெல்லாம் ரெவ்வெண்டு ரெடிமேடா. அதோட 3 பூணலும். செட் 40ரூ. நன்னா இருக்கே! சூப்பர் மார்க்கெட்டில் முட்டைக் கோஸ் வெட்டியே வச்சிருப்பன். ஆம்படையா ஆத்துக்காரர் ரெண்டுபேரும் வேலைக்கு போர அவசரத்துக்கு. அதுபோல. மாமா அதை வாங்கேண்டாம்னுடரர். “இதெல்லாம் செய்யரப்போ மனசுக்குள் மந்திரம் சொல்லிண்டே செய்யணும். இவா எப்படி செஞ்சு கட்டி வச்சிருக்காளோ? அதுவுமில்லாம பதவிசா வைதீகக் காரியம் செய்யரப்போ கர்த்தாவுக்கு மின்னாடி செய்யணும்னு சொல்லுவா. நீங்க புல்லா வாங்கிப்பது உசிதம்”. எடுத்துண்டதை அவன் கட்டித்தரவே இவர் இன்னும் தர்பையின் மகத்துவத்தை சொல்ரர்.

“சடங்குகளை சுத்தமா செய்ய தர்ப்பை பாயும் மான் தோலும் பரப்பி அதன் மேல் உட்காரணும். இப்ப இது முடியாது. மான்தோலுக்கு எங்கே போக? உங்காத்தில் இருந்தா பிடிச்சிண்டு போய் ஜெயிலில் வச்சுடுவா. சல்மான் கானா இருந்தாத்தான் மானை கொல்லலைன்னு சொல்லி தப்பிக்க முடியும்” சொல்லிட்டு சிரிக்கரர். அதுக்குத்தான் மணையில் உட்கார்ந்த உடன் வாத்தியார் “தர்ப்பையை எடுத்து காலுக்கடியில் போட்டுக்கோங்கோ” ன்னு சொல்லுவர்”.

“அதனால் ஒரு தர்ப்பை புல் கீழே வச்சுண்டா போரும். தர்ப்பை நல்ல, கெட்ட காரியத்துக்கும் வேணும். 1, 2, 3 அ 4 புல்லை சேர்த்து, விஷயத்துக்கு ஏற்ப உபயோகிக்கணும். தர்ப்பையில் கயிறு திரிஸ்சு பாதுகாப்புக்கு இடுப்பில் கட்டுவா. அதுக்கு பதிலா இப்ப கொஞ்சமா இடுப்பில் சொறுகிண்டா ஆச்சுன்னு. இதில் முக்கியாமானது பவித்ரம். இதுக்கு எவ்வளவு பொருத்தமான பெயர்! யாரு போட்டுக்கிராளோ அவா செய்யப்பிடாது. அதான் வாத்தியார் செய்து தருவர். எப்போவும் ஈரம் படாம பார்த்துக்கணும். எந்த ஒரு பிராமணன் பவித்ரம் போட்டுண்டிருக்கானோ அவன் சுத்தமாவும், பாதுகாப்பாகவும், தேஜஸுடன் இருப்பான்”.

“பிராம்மண சடங்குகளுக்கு வேற காரணங்களுக்காகவும் தர்ப்பை கட்டாயம். இன்னும் தெரிஞ்சுக்க இருக்கா?” நான் கேக்கரேன்.

“இந்த புல் நமக்கு நச்சு கதிர்வீச்சு மற்றும் கேட்ட சக்திகளிடமிருந்து கவசமா இருந்துண்டு ஆன்மீக சக்தியையும் பெருக்கித் தரும். மந்திர த்வொனிகளை வேகமாய் இன்னொரு இடத்துக்கு எடுத்துண்டு போகும். அதனால்தான் தர்ப்பை வச்சிண்டு மந்திரம் சொன்னா அது தேவலோகத்துக்கு கேட்கும். ஒரு இடத்தில் வாத்தியார் உங்கள் மனைவியை உங்கள் பின்னாடி நின்னுண்டு தர்ப்பை புல்லால் உங்களை தொட சொல்லுவார். இது உங்கள் இருவர் சக்தியும் இணைந்து சடங்கில் பங்கேற்க செய்வதற்கு”.

நினைச்சுண்டேன். சும்மா பாவனையா தர்பையை மாமா தோளில் வச்சுக்கோங்கோன்னு சொன்னா எங்காத்து மாமி வெறும் தோளாச்சேன்னு கூட பாக்காம  தர்ப்பையால் குறு குறுன்னு பண்ணுவா, அதுக்காக நெளியரச்சே ரெண்டு மந்திரம் சரியா கேட்காமல் சொல்லாமல் விட்டுப்போகும்.  அதல்லாம் ஞாபகம் வந்தது

“கிரஹணத்தின் போது யூஸ் செய்ய சொல்ராளே?” நான் கேக்கரேன். “ஆமாம் சாப்பட்ர பதார்தங்கள் கேட்ட கதிர்வீச்சால் கெட்டுப்போகாமல் இருக்க தர்ப்பை புல்லை அதில் போட்டு வைக்கிரோம்”. “இன்னும் ரூல்ஸ் ஏதாவது இருக்கா மாமா?”

“இருக்கே. தர்ப்பை புல் பற்றி ரூல்ஸ் இருக்கு. நுணியை கிள்ளி போட்டுடக் கூடாது. நதிக்கரையிலிருந்து எடுக்கும்போது மந்திரம் சொல்லிண்டு எடுக்கணும். 6 மாசத்துக்கு மேல ஸ்டாக் செய்யக் கூடாது. மறுபயன்பாடு கூடாது. சடங்கு முடிஞ்சதும் யாரும் நடந்து போகாத இடத்தில் போடணும்”. “6 மாசக் கணக்கு எதுக்கு மாமா?” “வேறொண்ணூம் இல்லை. அந்தக் காலத்துலேயே இதன் மகத்துவத்தை புரிஞ்சிண்ட பெரியவா இதை மிகச் சிலரே பரிச்சிண்டு போய் தனக்குன்னு வச்சிண்டப் பிடாது, பலருக்கும் பயன்படணும்னு இத்தனைதான் வச்சுக்கணும்னு ஒரு நியதி. செல்ஃப் டிசிப்ளின் கொண்டுவர அப்படி. இப்ப நீங்க எடுத்திண்டிருக்கும் ஒரு கட்டு 6 மாசத்துக்கு வரும்”.

விவரங்களை சொல்லிண்டே அவரே ஜோக் அடிச்சுண்டு சிரிப்பதையும் பாத்துண்டு அந்த கடைக்காரனும். நான் தந்த 100ரூபாய்க்கு பாக்கி தரணும். அதை பக்கத்து கடைக்காரங் கிட்டே வாங்கி தரான். நாங்க கிளம்பரோம்னு தெரிஞ்சிண்டு “ஐயரே! முக்கியமான ரெண்டு விஷயத்தை சொல்லாம விட்டூட்டீங்களே! நான் சொல்லட்டுமா?” மாமாவுக்கு அதிர்ச்சியாப் போச்சு. இவனுக்கு என்ன தெரியும், நாம என்னத்தை விட்டுட்டம்னு. “சொல்லேன், நாங்களும் தெரிஞ்சுக்கரோம்!” அவன் சொல்ரான்.

“தர்ப்பை வேற எங்கேயும் இல்லாமல் இந்தியாவில் மட்டும் தான் கிடைக்கும். இது நமக்கே நமக்குன்னு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம். அதை மதித்து போற்ற வேணும். ரெண்டாவது, “நம்ம வேதங்களில் தர்ப்பை பற்றி பல இடத்திலே வருதாம். அதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், நடுவில் கேசவனும், நுணியில் சங்கரனும் குடி இருக்காங்களாம். வலது கை மோதிர விரலில் போட்டுகிட்டா வேற என்ன தேவைப் படும்?”

“அப்படியா?” வியந்துபோனேன். மாமா கடைக்காரன் சரியாத்தான் சொல்ரான்னு ஆமோதிப்பதாய் தலையை ஆட்டரார். “ஆமாம். தர்பை இருக்கர இடத்துக்கு ஒரு வைரஸும் வர பயப்படும். வந்தா அழிஞ்சு போயிடுவம்னு”. ரெம்ப பவ்யமா, “உங்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?”

“என்ன ஐயரே! வாங்கரவங்களுக்கு தெரியாட்டாலும் விக்கரவங்க பொருளைப் பத்தி தெரிஞ்சுக்காம எப்படி வியாவாரம் செய்ய?”

No comments:

Post a Comment