மதுரைஶ்ரீமீனாட்சி_அம்மன் திருக்கோவிலில் பலரும் அறியாத, ஆனால் அதே சமயத்தில் மிகமிக அற்புதமான "அஷ்ட திக்பாலக தீபம்" எனும் தேவர்கள் காட்டும் தீபங்கள் பற்றிய பதிவு.
மதுரையின் க்ஷேத்ர மஹாத்மியமும், திருவிளையாடல் புராணமும் மதுரைக்கும் தேவர்களுக்கும் உடனான சம்பந்தத்தினைப் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கிறது.
இங்கே வீற்றிருக்கும் சோமசுந்தரப்பெருமானை தேவர்களின் தலைவனான சாக்ஷத் தேவேந்திரனே முதன்முதலில் பூஜித்தான்.
இதன் ஞாபகமார்த்தமாக இன்றளவும் வருடாவருடம் சித்திரைத்திருவிழா பன்னிரண்டாம் நாள் (சித்திராபௌர்ணமி) அன்று தேவேந்திர பூஜை ஐதீக விழா நடைபெறுகிறது !!!
இதனைத்தவிர திருவிளையாடல் புராணத்தில் "கடல் சுவற வேல்விட்ட படலம், இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம், வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம், நான் மாடக்கூடலான படலம்..." போன்ற பல படலங்கள் தேவர்களை சம்பந்தப்படுத்தியதாகவே (கர்வபங்கம் செய்ததாகவே) உள்ளது குறிப்பிடத்தக்கது !!!
உமையன்னை, மாமதுரை மாதரசி, மதுரை மீனாட்சி தன் திருமண வைபவத்தினை முன்னிட்டு எட்டு திசைகளுக்கும் திக்கு விஜயம் செய்தருளினாள் !!
ஒவ்வொரு திக்கிலும் இந்திரன், அக்னி, யமன், வருணன் என்று அந்த திக்கிற்கு அதிபதியான தேவருடன் போரிட்டு அவர்களை தலை வணங்க வைத்தாள் !!!
இந்த நிகழ்வு சித்திரைத் திருவிழா ஒன்பதாம் நாள் "திக்விஜய" உற்சவமாக நடைபெறுவது யாவரும் அறிந்ததே !!!
ஆக நம் மதுரை தெய்வங்களிடம் இந்த்ராதி அஷ்ட திக்பாலகர்களும் தோற்று, அவர்களை கைதொழுகின்றனர் என்பது கண்கூடாகின்றது !!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு கால பூஜையின்போதும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது போல் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விதவிதமான தீபாராதனைகள் காண்பிக்கப்படுகின்றன !!
ஆனால் அர்த்தஜாம பூஜையின் போது மட்டும் ஸ்பெஷல் (special) ஆக 8 கூடுதல் தீபாராதனைகள் காட்டப்படுகின்றன !!!
அவைகளே "அஷ்ட திக்பாலக" தீபங்கள் !!
இந்திர தீபம், அக்னி தீபம், வருண தீபம் என்று ஒவ்வொரு தீபத்திலும் ஒவ்வொரு திசைக்காவலரும் தத்தமது வாகனத்துடனும் ஆயுதங்களுடனும் கைகூப்பியவாறு வீற்றிருப்பர்.
(கீழே படங்கள் காண்க) !!!
இந்த்ராதி அஷ்டதிக்பாலக தீப பூஜையின் போது கூறப்படும் மந்திரங்கள்:
1.இந்திரன்: (கிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ரபரிவார ஸமேதம் இந்த்ரம்
திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.
2.அக்னி: (தென்கிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் அக்னிம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.
3.யமன்: (தெற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸ்வாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ர பரிவாரஸமேதம் யமம்
திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.
4. நிருதி: (தென்மேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸ்வாஹநம்
ஸசக்திம், பத்நீ புத்ர பரிவார ஸமேதம் நிருருதிம்,திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.
5.வருணன்: (மேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் வருணம்
திக்பாலம் த்யாயாமி, ஆவாஹயாமி.
6.வாயு: (வடமேற்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம், பத்நீபுத்ர பரிவார ஸமேதம் வாயும் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.
7.குபேரன்: (வடக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம், பத்நீபுத்ர பரிவார ஸமேதம் குபேரம் திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.
8.ஈசாநன்: (வடகிழக்கில்) ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸசக்திம் பத்நீபுத்ர பரிவார ஸமேதம் ஈசாநம்
திக்பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.
இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:, ரத்நஸிம்ஹாஸநம் ஸமர்ப்ப்யாமி.
பாத்யம் ஸமர்ப்பயாமி. அர்க்யம் ஸமர்ப்பயாமி. ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. ஸ்நாபயாமி.
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. யஜ்ஞோபவீதார்த்தம்
அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. கந்தாந் தாரயாமி. அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. புஷ்பாணி ஸமர்ப்பயாமி. தூபமாக்ராபயாமி. தீபம் தர்சயாமி.
மஹாநைவேத்யம் நிவேதயாமி. தாம்பூலம் ஸமர்ப்பயாமி. மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி. ஸர்வோபசாரார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதா ப்ரஸாத ஸித்திரஸ்து.
மேற்கூறிய அனைத்தும் வெறும் ஏட்டோடு மட்டுமில்லாமல் தினம்தோறும் நடைமுறையில் இருப்பது தான் மதுரையின் சிறப்பு !!!
இவர்களின் தீபத்தில் திரியிட்டு ஏற்றி அன்னைக்கும் சுவாமிக்குமாக காண்பிக்கும்போது அவர்களே வந்து தொழுவதாக ஐதீகம் !!!
அர்த்தஜாம பூஜைத்தவிர சில விசேஷ தினங்களுக்கும் காண்பிக்கப்படும் இத்தீபங்களின் அழகும், அதற்கென உள்ள பிரத்யேக மந்திரங்களின் ஒலியும் அதனை அறிந்து காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் !!!
எங்கேயோ வானுலகில் கோட்டைக்கட்டிக்கொண்டு உலாவும் தேவர்கள் ஒவ்வொரு நாளும் தவறாது அத்தனை தூரம் இறங்கி வந்து சுவாமி அம்பாளை தரிசிக்கவருகின்றனர் என்றால், அருகிலேயே இருக்கும் நாமும் தவறாது தினமும் ஆலயம் சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்குவோம் !!!
HOW I GOT MY DESIRED XMAS LOAN AMOUNT $520,000.00 FROM A RELIABLE AND TRUSTED LOAN COMPANY LAST WEEK. Email for immediate response: drbenjaminfinance@gmail.com
ReplyDeleteHello everyone, Am here to testify of how i got my loan from BENJAMIN LOAN FINANCE(drbenjaminfinance@gmail.com) I don't know if you are in need of an urgent loan to pay bills, start business or build a house, they offer all kinds of loan. So feel free to contact Dr.Benjamin Scarlet Owen he holds all of the information about how to obtain money quickly and painlessly via Email: drbenjaminfinance@gmail.com
and consider all your financial problems tackled and solved. Share this to help a soul right now. THANKS