Friday, July 10, 2020

தங்க திருநீறு

 சிவலிங்கம் செல்வந்தன். மர வியாபரத்தில் சக்கை போடு போடுபவன். கண் நிறைந்த மனைவி‌. இறை பக்தி மிக்கவள். பல தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு செல்வ செழிப்பு‌. ஆனால் அவனுக்கு இரண்டு மூன்று முறை குழந்தை இறந்தே பிறந்தது.இயற்கையின் விளையாட்டிற்கு சிவகாமி என்ன செய்வாள்?.சிவலிங்கத்தின் தாயின் தூண்டுதலின் பேரில் அவன் தன் மனைவியை கண்டபடி கடிந்து கொள்வான். அவன் தாயோ மாதர் குல மாணிக்கம்.தன் மகனுக்கு மறு திருமணம் செய்ய திட்டம் தீட்டினாள்.திருமணமே ஆகாத ஆணுக்கே திருமணம் கடினமான காலத்தில் திருமணமான சிவலிங்கத்திற்கு அது கானல் நீரே‌.
இம்முறை சிவகாமி தான் குழந்தை உண்டான செய்தியை மகிழ்வோடு கணவனிடம் தெரிவித்தாள்.
"இதில் என்ன மகிழ்ச்சி. எப்படியும்..."என்று கூற எத்தனித்தவனிடம் "அபசகுனமா எதையும் பேசாதீங்க..என் மனசுக்கு படுது. இந்த முறை என் குழந்தை தங்கும்ங்க" என்றவளிடம்
"ஆமாம் மரத்தடி ஜோசியர் சொன்னாரா.." என்று கிண்டலடித்தவனிடம்
"இல்லீங்க..நேத்திக்கு என் கனவுல நம்ப குல தெய்வம் சிவன் வந்தாருங்க " என்றவளிடம்
"அப்படியா ஒளவை பாட்டி என்ன சொன்னார் " என்று கிண்டலடித்த வனிடம்
"உங்க நம்ப குல வழக்கப்படி வருஷந்தோறும் நம்ப குல தெய்வக் கோவிலுக்கு  போய் வழிபாடு செய்யனும். உங்கப்பா காலத்துக்கப்புறம் அதை செய்யாத தெய்வ குத்தம். அதான் நமக்கு குழந்தை தங்கலை" என்றவளிடம்
"என்ன சிவன் உடுக்கை அடிச்சு சொன்னாரா" என்றவனிடம்
"இல்லீங்க. நம்ப குல தெய்வ சாமியாவே சிவலிங்கமாவே காட்சி தந்தார். ஆனா அதுல ஒரு குறை இருந்தது"என்றாள்.
"என்ன குறை.  கனவு கலைஞ்சதும் மறைஞ்சுட்டாரா"என்று வழக்கமான கிண்டல் அடிக்க
"இல்லீங்க..லிங்கத்துல திருநீறு இல்லிங்க"என்றாள்.
"அப்படீன்னா இன்னிக்கு மறுபடியும் வரும். திருநீறு மறக்காம பூசு"என்றான்.
" சரியாகச் சொன்னீங்க..ஆமாங்க திருநீறு பூசப் போறேன்.ஆமாங்க தங்கத்தால். நம்மளுக்கு நல்லபடியா குழந்தை தக்க  தங்க திருநீறு அணிவிக்கறதா நேந்துகிட்டேங்க" என்றவளை ஓங்கி அடிக்க வந்தவனை தடுத்து"ஏற்கனவே தெய்வ குத்தம் இருக்கு. இதையும் மறுத்தா......என்னை குத்தம் சொல்லாதீங்க"என்று விம்மியபடி மறைந்தாள் சிவகாமி.

குழந்தை பிறந்து ஆறு மாதமாகியது.சிவலிங்கம் தங்க திருநீறுக்கு பிடிகொடுத்த மாதிரி தெரியவில்லை.சிவகாமி இதனால் நொந்து நூலானாள். குழந்தையை கண்ணுக்கு கண்ணாக பார்த்துக்கொண்டாள்.

அன்று மாலை சோர்வாகத் திரும்பினான் சிவலிங்கம். அவனிடம் ஆர்டரிடும் கம்பெனிகள் இம்முறை அவ்வாறு செய்யாததால் பெருத்த நட்டத்திற்கு ஆளானான்.வீட்டில் சிவகாமியும் காணவில்லை. குழந்தையை எடுத்துக்கொண்டு எங்கே சென்றாளோ என்று தெரியவில்லை.

சற்று நேரத்தில் செல்போனில் சிவகாமி "என்னை மன்னிச்சிடுங்க. நீங்க நேர்த்திக்கடனை பத்தி கவலைப்படாம உதாசீனப்படுத்தீனீங்க. அதனால் எங்கம்மா போட்ட நகையை வச்சு தங்கத்தால திருநீறு செஞ்சு நம்ப சொந்த ஊருக்கு எடுத்துக்கிட்டு  போனேன்.உங்க கிட்ட சொன்னா போக விடமாட்டீங்கன்னு சொல்லாம போனேன். பஸ்ல தூங்கிட்டேன். கண்ணை திறந்து பார்த்தா குழந்தையையும் காணும். தங்க திருநீறு வச்சிருந்த பையையும் காணும். ஒரு திருடன் எடுத்துக்கிட்டு போயிட்டான்....தாங்க முடியலியே "என்று  கதறினாள்‌

" நான் இப்ப நம்ப குல தெய்வக் கோவில்ல இருக்கேன்.போலிஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்துருக்கேன். கோவில்ல சிவன் கிட்ட தான் முறையிடவும். இன்னும் பத்து நிமிஷத்துல கோவில் திறந்துடுவாங்க...ஐயோ என் குழந்தை. " என்று அலற்றியபடி கூறினாள்.

"அடி பாவி பணமும் போச்சு. குழந்தையும் போச்சு உன்னை ... இதோ வரேன்"என்றபடி கிளம்பினான்.

கோவில் திறந்தது.உள்ளே சென்றவள் பூசாரியிடம் சிவ சனன்னிதியை திறக்கப் பொன்னாள்.
"என்ன்னனு தெரியல.உள்ள ஒரு குழந்தையோட சத்தம் கேக்குறது.அதான் திறக்க பயமா இருக்கு‌"என்றார்பூசாரி.
"குழந்தையா...அப்ப என் குழந்தையாத் தான் இருக்கும்."என்றவளிடம்
"என்னம்மா உளர்ற" என்ற பூசாரியை கண்டு கொள்ளாமல் அங்கிருந்து தப்பிச் சென்று ஓடும் பஸ்ஸில் தான் பார்த்த திருடனை பிடிக்கப் போனாள்.
அவன்" உன் குழந்தையும் நேர்த்தியும் நேர்த்தியா இருக்கு" என்றபடி மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தான்.
பூசாரி சிவ சன்னிதியை திறக்க குழந்தை சிவலிங்கத்தை அணைத்தபடி நின்று கொண்டிருந்தது.தங்கத்திருநீறு கொண்ட பை ஒரு ஓரமாக இருந்தது.சிவலிங்கம் சரியான தருணத்திற்கு வர
"ஏங்க உங்க கையால் செய்ய முடியாத நேர்த்திக்கடனைஉங்க பையன் செஞ்சுட்டாங்க" என்று நா தழுதழுக்க கூறினாள்.
"ஆமாம் சிவகாமி ஐயர் கிட்ட சொல்லி இப்பவே தங்கத்திருநீரை இப்பவே சாத்திடலாம்" என்றபடி குழந்தையை அணைத்துக்கொண்டான்.
சிவலிங்கத்தின் செல் போன் மணி ஒலிக்க மறுபுறமிருந்து "உங்க ஐட்டம் எல்லாம் நல்லா இருக்கு.காலைல லோயஸ்ட் கொட்டே ஷன்னு மட்டமான ஓட்டத்துக்கு ஆர்டர் போட்டுட்டோம். மன்னிப்ச்சுடுங்க" என்று சொன்னதைக் கேட்டு சிவலிங்கம் சிவலிங்கத்தை தழுவிக் கொண்டான்.

No comments:

Post a Comment